Tuesday, September 25, 2007

பரங்கிப்பேட்டை மீனவர்கள் ஏமாற்றம்

பரங்கிப்பேட்டை மீனவர்கள் கடலில் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்

படகுகள் கரையோரம் நிறுத்தி வைப்பு

பரங்கிப்பேட்டை மீனவர்கள் கடலில் மீன் கிடைக்காமல் திரும்பி வந்தனர். படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்தனர்.

மீனவர்கள் தவிப்பு

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் சாமியார் பேட்டை, கிள்ளை கடற்கரையோரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 6 மாதமாக கடற்கரை முகத்துவாரம் மணலால் மூடப்பட்டதால் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வந்தனர்.

அவர்களால் மீன் பிடிக்க செல்ல முடிய வில்லை.

படகுகள் நிறுத்தம்

பின்னர் கடல் முகத்துவாரம் படகு செல்லும் அளவுக்கு தூர்வாரபட்டது.

கடந்த 2 நாளாக பரங்கிப்பேட்டை கடலில் மீன் கிடைக்கவில்லை என்று மீனவர்கள் புலம்பி வந்தனர்.

நேற்று காலையும் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

ஆனால் மீன் ஏதும் அவர்கள் வலையில் சிக்கவில்லை.

இதனால் கடலுக்கு சென்ற அனைத்து மீனவர்களும் மீன் பிடிக்காமல் திரும்பிவந்தனர்.

அதன் பிறகு படகுகளை கடற் கரையோரம் நிறுத்தி விட்டனர்.

இதுபற்றி மீனவர் ஒருவர் கூறியதாவது:-

சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க செல்கிறோம்.

ஆனால் தற்போது மீன்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நாங்கள் படகுக்கு செலவு செய்யும் டீசல் செலவுதான் வீண் ஆகிறது.

இதனால் தினந்தோறும் நாங்கள் பாதிக் கப்பட்டு வருகிறோம்.

கடந்த 6 மாதமாக எங்களுக்கு சரியான வருமானம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மீன்கள் கிடைக்காததால் மீன் ஏலம் விடும் தளம் வெறிச்சோடி கிடந்தது.

மீன் வாங்க வந்த வியாபாரிகளும் திரும்பி சென்றனர்.

No comments: