ரமலான் சிந்தனைகள் - 13
இறைவன் தரும் சான்றிதழ்
ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கிறோமே...அந்த மாதத்தின் சிறப்புகள் தான் என்ன? நபிகள் நாயகத்திடமே கேட்போம்.
"ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன.
நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன.
ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன.
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள்.
யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும் (நம்பிக்கை), நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் 'லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன்செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
ஆதமுடைய (உலகில் முதல் மனிதர்) மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர, பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது.
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளிலே (வாழ்வின் இறுதிக்கட்டம்) விழிப்புடன் இருக்கும்,''
"நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்.
ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான்.
மேலும், நோன்பு திறக்கும்போதும் (முடியும் நேரம்), தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,'' என்கிறான் அல்லாஹ்.
இறைவனே இப்படி நமக்கு சான்றிதழ் தரும் போது, நோன்பை எந்தளவுக்கு முறையாகவும், கடுமையாகவும் நோற்க வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment