Thursday, September 6, 2007

பரங்கிப்பேட்டையை கப்பல்கட்டும் துறைமுகமாக அறிவிக்க கோரிக்கை .

பரங்கிப்பேட்டையை கப்பல்கட்டும் துறைமுகமாக அறிவிக்க கோரிக்கை .

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி. எம்.எஸ். முஹம்மது யூனூஸ் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில்
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் ரெட்டியார்பேட்டை புதுக்குப்பம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க இருப்பதை சிலம்பிமங்கலம் துறைமுகம் என பெயர் வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளாத அறிகிறோம். புதுக்குப்பத்திற்கு மிக அருகில் உள்ள பழமை வாய்ந்த துறைமுக நகரமான பரங்கிப்பேட்டையை துறைமுகமாக அறிவிக்க வேண்டும் என கோருகிறேன். உலகம் அறிந்த பழைய துறைமுக நகரமான பரங்கிப்பேட்டை போர்த்துகீசிய காலத்தில் போர்ட்நோவோ என்ற துறைமுகமாக இருந்து வந்தது. நீண்ட வரலாறுகளை உள்ளடக்கிய பழமை வாய்ந்த நகரம், மீன்பிடி துறைமுகம், சுற்றுலா தளம் பரங்கிப்பேட்டை, கிள்ளை புதியபாலம் அமைய இருக்கின்ற இந்த ஊரை துறைமுகமாக அறிவித்து இப்பகுதியை முன்னேற்ற தமிழக அரசிற்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறேன்.
பேரூராட்சி அலுவலகம்
பரங்கிப்பேட்டை.
இந்த கோரிக்கை பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பாக கொடுக்கப்பட்டது
உயர்திரு. மாவட்ட ஆட்;சியர் அவர்கள், கடலூர்.பெருமதிப்பிற்குரிய ஐயா,
பரங்கிப்பேட்டை வாழ்பொதுமக்கள் மற்றும் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள ஊர்களில்வாழும் மக்கள் சார்பாக இக்கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்;சியர் அவர்களின் மேலான தகவலுக்காகவும் நடவடிக்கைக்காகவும் சமர்ப்பிக்கிறேன்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் OTயிலிருந்து பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி வரை அரசு டவுன் பஸ் இயங்கிவறுகிறது. பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் புதுநகருக்குச்செல்வோர் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் தனியார் பேருந்துகளையே பயன்படுத்தவேண்டிய நிர்பந்தம் உள்ளது. மேலும் பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் புதுநகருக்கு மிகக்குறைந்த அளவிலேயே தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. பலநேரங்களில் மணிக்கணக்கில் கடலூர் புதுநகருக்குச் செல்ல பேருந்துகள் இருப்பதில்லை இதனால் கடலூர் புது நகருக்குச் செல்லவேண்டிய பொதுமக்கள், வியாபாரிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெறும் கிரமத்திற்கு ஆளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் கடலூர் புதுநகருக்குச் செல்வோர் பு.முட்லூர் சென்று அங்கிருந்து கொத்தட்டை வழியாக கடலூர் செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனால் தேவையற்ற கால விரயமும் பணச்செலவும் ஏற்படுகிறது. மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி கல்லூரிக்கும் அலுவலகத்திற்கு சென்றடைய முடியாதநிலை உள்ளது.
அவர்களின் புதிய போக்குவரத்து கொள்கையின்படி 35 கிலோமீட்டர் Àரம் வரை அரசு டவுன் பஸ்களை இயக்கலாம் என அறிகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரங்கிப்பேட்டை வாழ் பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர், வணிகர்கள் ஆகியோரின் சவுகரியம் கருதி கடலூர் புதுநகரிலிருந்து ஒவ்வொரு மணிஇடைவெளியிலும் ஒரு டவுன் பஸ்ஸை பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளிவரை இயங்கிட சம்மந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குமாறு பணிவுடன் கோறுகிறோம். இந்த நியாயமான கோரிக்கை ஏற்க்கப்பட்டு கடலூர் புதுநகரில் இருந்து பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி தெருவரை புதிய வழித்தடம் துவங்கினாலும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்துவரும் கடலூர் யிலிருந்து பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி வரை இய ங்கி வரும் டவுன்பஸ்களும் தொடர்ந்து இயங்கத்தக்க வகையில் புதிய வழித்தடத்தினை இயக்கிட ஆவண செய்யுமாறு கோறுகிறேன்.


நன்றி: www.parangipettai.com

No comments: