சென்னை காஷpபுல் ஹுதாவின் அல்மதரசத்துல் மஹ்முதியா (மீராப்பள்ளி, பரங்கிப்பேட்டை) ஹாபிழ் பட்டமளிப்பு விழா கடந்த ரஜப் மாதம் பிறை 21 (05.08.07) ஞாயிறு அன்று பரங்கிப்பேட்டை, மீராப்பள்ளி அல்மதரசத்துல் மஹ்முதியா வளாகத்தில் இனிதே நடைபெற்றது. உலமா பெருமக்கள், மாணவர்கள், நகர ஜமாஅத்தார்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேருராட்சி மன்றத்தின் தலைவர் ஜனாப் முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமையேற்றார்கள். அல்மதரசத்துல் மஹ்முதியா நிர்வாகி கலிமா ஹாஜி. சேய்கு அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். சென்னை காஷpபுல் ஹுதாவின் முதல்வர் மௌலானா அல்ஹாஜ் முஹம்மது யாகுபு ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது (பட்டம்) வழங்கி துஆ செய்தார்கள்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் செயின்ட் ஆல்பன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம் ஒன்றினை கடந்த மாதம் பரங்கிப்பேட்டை ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியிpல் புவனகிரி தொகுதி மக்கள் பிரதிநிதி செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு உரையாற்றினார் .
நன்றி: www.parangipettai.com
Thursday, September 6, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment