ஆயிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது
புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அவரது கல்வி சேவையை பாராட்டி நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆயிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் சாமிதுரை.
இவர் 2006-07ம் ஆண்டு தனது பணிக் காலத்தில் கல்வித்துறையில் ஆற்றிய பல்வேறு பணிகளை பாராட்டி தமிழக அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியது.
விருது பெற்ற ஆசிரியர் சாமிதுரையை பரங்கிப்பேட்டை ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கண்ணன், ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் கலைக்கல்வி கல்லூரி முதல்வர் டாக்டர் தெய்வநாயகம், பள்ளிப்படை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆயிபுரம் கண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் ஆகியோர் பாராட்டி சால்வை அணிவித்தனர்.
No comments:
Post a Comment