Wednesday, September 12, 2007

மின் விளக்கு வசதி செய்து தரக் கோரி கலெக்டரிடம் மனு

பூவாலை கிராமத்திற்கு மின் விளக்கு வசதி செய்து தரக் கோரி கலெக்டரிடம் மனு

பூவாலை ஊராட்சியில் மயானத்திற்கு செல்லும் சாலைக்கு மின் விளக்கு வசதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் தமிழ்வளவன் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பூவாலை மேற்கு, கிழக்கு என இரண்டு வி.ஏ.ஓ.,க்கள் பணியாற்றி வருகின்றனர்.

கிழக்கில் ஆதிதிராவிட மக்களும், பூவாலை மேற்கில் மற்ற இன மக்களும் வசிக்கின்றனர்.

இரு பகுதிக்கும் தனித்தனியாக மயானம் உள்ளது.

ஆனால் இந்த இரு மயான பாதைகளில் மின் விளக்கு வசதி இல்லை.

மேலும் இரு மயான சாலைகளும் மக்கள் நடமாடும் பகுதியாக இருப்பதால் இரவு நேரங்களில் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் போது சிரமப்படுகின்றனர்.

பூவாலை மேற்கில் சொசைட்டி தெரு, குண்டியமல்லூர் சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் வரை இரு தெருக்களிலும் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளன.

தெரு மின் விளக்கின்றி இருக்கும் பகுதிகளுக்கு கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து மின் விளக்குகள் அமைத்துக் கொடுக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

No comments: