Thursday, September 13, 2007

பரங்கிப்பேட்டை ஒன்றியம் மடவாப்பள்ளம் கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா

மரக் கன்றுகள் நடும் விழா

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த பகுதிகளில் சுற்றுசூழலினை உருவாக்கிட கலெக்டர் ராஜேந்திர ரத்னு உத்தரவின் பேரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட அலுவலர் ஆகியோரின் ஆலோசனைப்படி முதற் கட்டமாக பரங்கிப்பேட்டை ஒன்றியம் மடவாப்பள்ளம் கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

விழாவை உதவி திட்ட அலுவலர் உஷா ராணி துவக்கி வைத்தார். விழாவில் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சதீஷ், ஜெயபாரத் பிளஸ் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments: