பரங்கிப்பேட்டையில் ஓடும் பஸ்சில் 2 பவுன் நகை திருட்டு
மூன்று பெண்கள் உட்பட 6 பேர் கைது
பரங்கிப்பேட்டை அருகே ஓடும் பஸ்சில் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பவுன் நகையை திருடிய தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். (23). இவர் நேற்று முன்தினம் இரண்டு பவுன் நகையை அடமானம் வைப்பதற்காக சிதம்பரத்திற்கு தனியார் பஸ்சில் சென்றார்.
பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது மூன்று பெண்கள் உட்பட 6 பேர் பஸ்சில் ஏறினர். அதில் ஒருவர் பிரகாஷ் கைப்பையில் வைத்திருந்த நகையை திருடி அவர்களுடன் வந்த ஒருவரிடம் கொடுத்தார். பின்னர் அவர் நகையை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளார். இப்படி மாறி மாறி 6 பேரிடமும் நகை சென்றுள்ளது.
இதற்கிடையே பஸ் பு.முட்லூர் அருகே சென்ற போது பிரகாஷ் கைப்பையில் வைத்திருந்த நகையை காணாமல் சத்தம் போட்டார். உடன் பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் நகையை தேடினர்.
அந்த நேரத்தில் 6 பேர் நைசாக கீழே இறங்கியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பயணிகள் அவர்களை பிடித்து பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டு ராதா, ரெங்கநாதன், முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் பழைய தர்மபுரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பா மகன் முருகன் (40), இவரது மனைவி ஜானகி (35), முருகனின் மகன் சுதன் (24), சுதனின் மனைவி பல்லவி (20), குமார் மனைவி சுசிலா (20), பாண்டியன் (23) என்றும் பஸ்சில் நகையை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடமிருந்து போலீசார் நகையை மீட்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
No comments:
Post a Comment