Thursday, September 13, 2007

பரங்கிப்பேட்டை அருகே குளம் வெட்டும் பணி

பெரியகுமட்டியில் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் குளம் வெட்டும் பணி

- ஒன்றிய ஆணையாளர் பார்வை

பரங்கிப்பேட்டை அருகே தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணியை ஒன்றிய ஆணையாளர் பார்வையிட்டார்.

பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில் உள்ள நந்தவனம் குளம் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதியதாக வெட்டப் படுகிறது.

இந்த பணியை நேற்று பரங்கிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் பார்வையிட்டார்.

அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், இன்ஜினியர் சண்முகசுந்தரம், துணை தலைவர் பாலமுருகன், அகிலாண்ட பிச்சாண்டி, மக்கள் நலப்பணியாளர் வெங்கடாஜலபதி, ஊராட்சி எழுத்தர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: