கடலூரில் வரும் 27ம் தேதி அஞ்சல் சேவை குறைகேட்பு
கடலூர் அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.
இது குறித்து அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கனகராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வரும் 30ம் தேதியுடன் முடியும் காலாண்டுக்கான அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடலூர் வண்ணாரப்பாளையம் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி நடக்கிறது.
கூட்டத்திற்கு அஞ்சலக கண்காணிப்பாளர் கனகராஜன் முன்னிலை வகிக்கிறார்.
அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களுக்கான குறைகள் இருந்தால் அதற்கான தீர்வுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
அனைத்து அஞ்சலக சேவைகளிலும் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை விவாதித்து தீர்வுகள் காணப்படும்.
விவாதத்திற்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் அவைகளை எழுதி அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம் என்ற முகவரிக்கு வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment