பரங்கிப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை திறந்து தங்க நகை திருட்டு
2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பரங்கிப்பேட்டை,செப்.10-
பரங்கிப்பேட்டை அருகே விவசாயின் வீட்டின் பூட்டை திறந்து தங்க நகைகளை திருடிச் சென்ற 2 மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயி
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் தர்கா தெருவை சேர்ந்தவர் நூருல் அமீது (வயது 45). விவசாயி. நேற்று முன் தினம் மதியம் நூருல் அமீது தனது குடும்பத்தினரோடு சிதம்பரம் சென்றார். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு நூருல் அமீது அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கே பீரே திறந்து இருந்தது. அதில் இருந்த 4 தங்க வளையல்களை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் உள்ளே வந்து திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
2 பேருக்கு வலைவீச்சு
அதனை தொடர்ந்து நூருல் அமீது வீட்டு பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 2 பேர் நூருல் அமீதை பார்த்து ஓடினார்கள். அவர்களை நூருல்அமீது துரத்தி சென்றார். அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இது பற்றி நூருல் அமீது பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு நகைகளை திருடிக் கொண்டு விட்டு தப்பி ஓடிய 2 பேரை தேடிவருகின்றனர்.
No comments:
Post a Comment