பரங்கிப்பேட்டை அருகே தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
பரங்கிப்பேட்டை,செப்.10-
பரங்கிப்பேட்டை அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கண்ணாடி உடைப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் தனியார் பஸ் ஒன்று கடலூர் நோக்கி சென்றது. பஸ்சை மணிக்கொல்லையை சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்தார். அந்த பஸ் புதுச்சத்திரம் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் வந்தது. அப்போது அங்கிருந்த பயணிகள் பஸ்சை மறித்தனர். ஆனால் பஸ் நிற்காமல் கடலூர் சென்றது.
இது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து அந்த கடலூர் சென்று விட்டு மீண்டும் பூண்டியாங்குப்பம் மெயின் ரோடு வழியாக சிதம்பரம் வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பூண்டியாங்குப்பம் ராஜாராமன் மகன் விஜி (வயது 20) பஸ்சின் முன்பக்க கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தாக தெரிகிறது. இதில் கண்ணாடிகள் சுக்கு தூறாக உடைந்து விழுந்தது.
வாலிபருக்கு வலைவீச்சு
இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இது பற்றி பஸ் டிரைவர் மணிகண்டன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த விஜியை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment