Wednesday, October 24, 2007

பரங்கிப்பேட்டை அருகே குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்

பரங்கிப்பேட்டை அருகே குடிநீரின்றி தவிக்கும் சிலம்பிமங்கலம் கிராம மக்கள்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பரங்கிப்பேட்டை அருகே குடிநீரின்றி சிலம்பிமங்கலம் ஊராட்சி மக்கள் தவித்து வருகின்றனர்.

இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

குடிநீர் வசதி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது சிலம்பிமங்கலம் ஊராட்சி.

இந்த ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சியின் மெயின்ரோட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் குடிநீர் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

குடிநீர் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் குழாயில் தண்ணீர் வரவில்லை.

இதனால் மெயின் ரோட்டில் வசித்து வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குடிநீர் வராததால் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதனிடம் அப்பகுதி மக்கள் பல முறை நேரில் சென்றும், மனுவாகவும் எழுதி கொடுத் தனர்.

சீரமைக்க வேண்டும்

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் பொது மக்கள் தங்கம் ஆடு, மாடுகளை கட்டி வைத்துள்ளனர்.

சிலர் அந்த குடிநீர் குழாயை குப்பை தொட்டியாக வைத்துள்ளனர்.

பொது மக்களுக்காக செலவு செய்து வைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தற்போது செயல்படாமல் உள்ளது.

இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது.

மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.

ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி அந்த குடிநீர் குழாய்களில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments: