Saturday, November 3, 2007

பரங்கிப்பேட்டையில் ஃபித்ரா (பெருநாள் தர்மம்) நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை மாநகரில் ஃபித்ரா (பெருநாள் தர்மம்) நிகழ்ச்சி மஹ்மூதியா ஷாதி மஹாலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழைகள் கலந்துக்கொண்டு
ஃபித்ராவை (பெருநாள் தர்மத்தை)
பெற்றுக்கொண்டனர்.







ஃபித்ரா (பெருநாள் தர்மம்) என்பது
ஏழைகளுக்குறியதாகும்.
அதை பெருநாளைக்கு முந்தைய தினம் ஏழைகளுக்கு வழங்க வேண்டியது அவசியமானதாகும்.



இந்த வகையில் பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்ற ஃபித்ரா (பெருநாள் தர்மம்) நிகழ்ச்சி இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் சார்பாக தலைவர் ஜானப். முஹம்மது யூனுஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.






இதில் அமைப்பை சார்ந்த சகோதரர்களும் அமைப்பை சாரா சகோதரர்களும் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டனர்.




ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டி தயார் செய்து வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள்
















இவர்களுக்கு மத்தியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இதில் பங்கேற்று
சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.









சிறுவர்கள் ஏழைகளை புன்னகையுடன் அன்போடு வரவேற்று அவர்ளுக்கு ஃபித்ரா (பெருநாள் தர்மம்) வழங்கியது சிறுவர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் மீதுள்ள ஆர்வத்தையும் ஏழைகளின் மீதுள்ள அன்பையும் வெளிப்படுத்துகின்றது.

No comments: