Thursday, April 3, 2008

மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த
மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு

ரபீவுல் அவ்வல், ஹிஜ்ரி 1429 - மார்ச் 2008
21-03-2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை குவைத் மைதான் ஹவல்லி (ஸால்மியா) பகுதியில் உள்ள ஷஅப் பார்க் அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி சிறப்பு மாநாடு... மாநபியின் மகத்துவத்தை மலர வைக்கும் ஸீரத்(மீலா)துன் நபி சிறப்பு சொற்பொழிவு, K-Tic பிறை செய்தி மடல் மாத இதழின் 'ஸீரத்துன் நபி சிறப்பிதழ்' வெளியீட்டு விழா மற்றும் 'பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா' என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்... மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் T.P. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் தலைமையேற்க, சங்கத்தின் துணைத்தலைவர் அல்ஹாஜ் A.A. கபீர் அலீ திருக்குர்ஆன் கிராஅத் ஓத, சங்கத்தின் ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஜனாப் A. ஹஸன் முஹம்மது வரவேற்புரையாற்ற, சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாநாடு இனிதே துவங்கியது. முதல் அமர்வாக வாழ்த்தரங்கம் நடைபெற்றது. ஹலால் உணவு ஆய்வாளர் ஜனாப் A. நாகூர் மீரான் B.Sc., 'அண்ணலார் அருளிய ஆரோக்கிய வாழ்வு' என்ற தலைப்பிலும், சங்கத்தின் துணைத் தலைவர் அல்ஹாஜ் N.B. அப்துல் பாரி 'இனிய நபியின் இறை அழைப்பு' என்ற தலைப்பிலும், சமுதாயக் கவிஞர் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி M.A., B.Ed., 'சற்குண நபியின் நற்குணங்கள்' என்ற தலைப்பிலும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இண்டிகிரேடட் கலாசாலையின் துணை முதல்வரும், சங்கத்தின் கல்விக்குழு உறுப்பினருமான முனைவர் பேராசிரியர் M. அப்துல் ஹமீத் M.Sc., M.Phil., B.Ed., 'காருண்ய நபியின் கல்விப்பணி' என்ற தலைப்பிலும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளரும், சங்கத்தின் சார்பாக குவைத் சுர்ரா பகுதியில் நடைபெற்றுவரும் மதரஸா அல் ஜமாலிய்யா திருக்குர்ஆன் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளருமாகிய மௌலவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் A.R. முஹம்மது அலி ரஷாதி 'தாஹா நபியும் தஃவத்தும்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் பயிலரங்க குழு உறுப்பினரும், குவைத் ஹுஸைனிய்யா அரபி மொழி பயிற்சி நிலையத்தின் இயக்குநருமாகிய மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் M. மஹ்பூப் பாஷா ரஷாதி 'சாந்த நபியும் சமுதாயச் சேவையும்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவி ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் M.J.M. முஹம்மது அஜ்வத் ரைவின்தி லாஹுர் (இலங்கை) 'ஸீரத்துன் நபி ஓர் பார்வை' என்ற தலைப்பிலும், சங்கத்தின் ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவி அஷ்ஷைக் A. அப்துஸ் ஸலாம் தாவூதி 'திருநபியும் திருக்குர்ஆனும்' என்ற தலைப்பிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து வாழ்த்துரை வழங்கினர். இரண்டாவது அமர்வாக மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் மாலை 6:30 மணி முதல் ஸீரத்துன் நபி சிறப்பு நிகழ்ச்சி துவங்கியது. துவக்கமாக குவைத் நாடு தழுவிய அளவில் தமிழ் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட திருக்குர்ஆன் மனன போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவ மாணவியரின் திருக்குர்ஆன் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட் டின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் T.P. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்களின் தலைமையுரைக்கு பின், குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒரு பிரிவான உலகளாவிய இஸ்லாமிய நடுநிலை அமைப்பி(I.M.C)ன் அச்சக நிர்வாகத் துறை அதிகாரி அஷ்ஷைக் ஸாமீ அல் அதுவானீ மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா என்ற தமிழக அரபிக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர், நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முனனாள் முதல்வர், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம், வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் இன்னாள் முதல்வர், நாடறிந்த நாவலர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் O.M. அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு கொள்வோம்!' என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக மாநாட்டு பேருரையாற்றினார். இரண்டாவது நிகழ்ச்சியாக குவைத்திலிருந்து தமிழில் வெளியாகும் முதல் இலவச இஸ்லா மிய இதழான 'K-Tic பிறை செய்தி மடல்' மாத இதழின் '2008 - ஹிஜ்ரீ 1429 ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பிதழ்' வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பிதழை தமிழக சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் O.M. அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் வெளியிட சங்கத்தின் ஆலோசகர், குவைத் கோல்டன் அல்மாஸ் உணவக உரிமையாளர் ஜனாப் முஹம்மது முஸ்தஃபா பெற்றுக் கொண்டார். சிறப்பு மலரை தன் சொந்த செலவில் அச்சிட்டு வழங்கிய குவைத் லக்கி அச்சக அதிபர் சுலைமான் பாட்சா (அய்யம்பேட்டை) அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது நிகழ்ச்சியாக... குவைத்தில் வசிக்கும் தமிழறிந்த அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் நாடு தழுவிய அளவில் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக 'மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு மற்றும் திருக்குர்ஆன் மனனப் போட்டிகள்', அனைத்து தரப்பு மக்களுக்கும் 'இஸ்லாமிய பொதுஅறிவு போட்டி' ஆகியவற்றை கடந்த பிப்ரவரி (2008) மாதம் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்திருந்தது. 'இஸ்லாமிய சொற்பொழிவு மற்றும் திருக்குர்ஆன் மனனப் போட்டிகள்' வெற்றி பெற்ற ஆடவர், மகளிர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் முறையாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் பத்து ஆறுதல் பரிசுகளும், போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட் டன. 'இஸ்லாமிய பொதுஅறிவு போட்டி'யில் சரியான முறையில் விடையெழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் பத்து ஆறுதல் பரிசுகளும், சரியான விடையெழுதிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்த நடுவர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை தமிழக சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் O.M. அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் வழங்கினார். குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை முன்னாள் அமைச்சர் அஷ்ஷைக் யூஸுஃப் ஹாஷிம் ரிஃபாயி, குவைத் பல்கலைக்கழக புவி மற்றும் நிலவியல் பேராசிரியர் டாக்டர் இப்ராஹீம் அல் ரிஃபாயி, குவைத் தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரியின் பொறியியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஜமால் அப்துல்லாஹ் அலீ அல் ஹுபைல் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் மாநாட்டு நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டன. சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் கொள்கைகள், சேவைகள், செயற்பாடுகள் குறித்து எடுத்துரைக்க, சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ நன்றியுரையாற்ற, தமிழக சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் O.M. அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்களின் துஆவுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. இச்சிறப்பு மிகு மாநாட்டில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் என நூற்றுக்கணக்கானோர் அரங்கம் நிரம்ப தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றமை, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி இன்னும் இதுபோன்ற பயனுள்ள பல மாநாடுகளையும், நிகழ்ச்சிகளையும் அதிகமதிகம் நடத்த வேண்டும் என்ற பேராவலையும் தூண்டி விட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், ஸீரத்துன் நபி விழாக் குழுவினர் மற்றும் K-Tic பிறை செய்தி மடல் மலர்க்குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ். மேலதிக செய்திகளுக்கும், மாநாட்டு புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸஸலாம்.
செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
மின்னஞ்சல்கள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம் : www.k-tic.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

No comments: