Saturday, September 15, 2007

ரமலான் சிந்தனைகள் - 2

ரமலான் சிந்தனைகள் - 2

பெண்கள் நமது கண்கள்

எத்தகைய பெண்கள் மணவாழ்வுக்கு ஏற்றவர்கள் என்பதை இஸ்லாம் வரையறுத்துள்ளது.


"ஒரு பெண்ணை அவளுடைய செல்வம், அழகு, குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மணம் முடிக்கப்படுகிறது. நீங்கள் மார்க்கப்பற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்,'' என்கிறார் நபிகள் நாயகம்.

திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார்.


எந்த நேரமும் சண்டை போட்டுக் கொண்டும்,

பெருமூச்செறிந்து கொண்டும்,

இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புவதும்,

கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் "உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்' என குறை சொல்வதும்,

முன்னாள் கணவரை மறக்க முடியாமல் அவருக்கு பிறந்த குழந்தைகளை நினைத்து வருந்துவதும்,

கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்பதும்,

வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துவதும்,

அதிகமாகப் பேசுவதுமான குணங்கள் பெண்களால் தவிர்க்கப்பட வேண்டியவை.

ரமலான் நோன்பு காலத்தில், பட்டினி கிடப்பதும், அதிக நேரத்தை தொழுகையில் செலவிடுவதும் மட்டும் உயர்ந்த இடத்தை தந்து விடாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பெண்கள் மேற்கண்ட குறைகளைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

பெண்களை மரியாதையுடன் நடத்தவும் ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது.

"பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஏனென்றால், அவர்களே உங்கள் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்,'' என்கிறார் நபிகள் நாயகம்.

உரிமை என்ற பெயரில், ஆணினமும், பெண்ணினமும் தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை அறவே மறந்து, நல்லிணக்கம் கொள்வதே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.

இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!

No comments: