அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய பண்ருட்டியை சேர்ந்த 3 பேர் கைது
பரங்கிப்பேட்டை அருகே அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய பண்ருட்டியை சேர்ந்தவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டுகள் ராதா, ரங்கநாதன், முருகேசன் ஆகியோர் நேற்று பு. முட்லூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது பு. முட்லூர் ஜவுளிக் கடை அருகே பண்ருட்டி ஜாகிர் உசேன் தெரு முகமது ஹனிபா மகன் ஷாஜஹான் (24), அதே பகுதி சைய்யது அலி (23), பரங்கிப்பேட்டை குட்டைய செட்டி தெரு முஜாகித் (23) ஆகியோர் அரசுக்கு எதிராகவும், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த செய்தி குறித்த மேலதிக விபரங்கள் தேவைப்படுகின்றன. அறிந்தவர்கள் பின்னூட்டம் இடலாம்
No comments:
Post a Comment