அரியகோஷ்டி துணை சுகாதார நிலையம் திறக்காமல் பூட்டியே கிடக்கும் அவலம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் அரியகோஷ்டி கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பிரசவ பெண்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக வாரத்திற்கு ஒரு முறைதான் இந்த துணை சுகாதார நிலையம் திறக்கப்படுறது.
இதனால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பு.முட்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.
கடந்த காலங்களில் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் இங்கேயே தங்கி பணிபுரிந்தனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் யாரும் வராததால் திறக்காமலேயே பூட்டியே கிடக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அரியகோஷ்டி வந்து சிகிச்சையளிப்பதாக இந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
துணை சுகாதார நிலையம் சேதமடைந்துள்ளதால் இங்கு யாரும் தங்குவதில்லை.
இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து டாக்டர்கள் தினமும் வந்து சிகிச்சையளிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment