வீச்சரிவாளை காட்டி தாய், மகனை மிரட்டிய வல்லம்படுகையை சேர்ந்த நான்கு பேர் கைது
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தாய், மகனை வீச்சரிவாளை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய வல்லம்படுகையை சேர்ந்த பிரபல ரவுடி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டையை அடுத்த சின்னகுமட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (47). இவரும் அவரது தாய் ருக்மணியும் தமது வெள்ளரி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வல்லம்படுகை பிரபல ரவுடி சுபாஷ் (30), வாண்டியாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25), அண்ணாமலைநகர் மண்ரோடு பகுதி முத்துபாண்டி (24), அதே பகுதியை சேர்ந்த பட்டாணி என்கிற மாரிமுத்து (24) ஆகிய 4 பேரும் கண்ணனுடைய வெள்ளரி தோட்டத்தில் புகுந்து வெள்ளரிக்காய் பறித்துள்ளனர்.
இதை பார்த்த கண்ணனும், அவரது தாய் ருக்மணியும் யாரையும் கேட்காமல் ஏன் வெள்ளரிக்காய் பறிக்கிறீர்கள் என கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ருக்மணி, கண்ணன் ஆகியோரை தாக்கி வீச்சரிவாளை காட்டி கொலை செய்வதாக மிரட்டினர்.
இது குறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் ஆகியோர் விரைந்து வந்து சுபாஷ் (30), மணிகண்டன் (25), முத்துபாண்டி (24), பட்டாணி என்கிற மாரிமுத்து (24) ஆகிய நான்கு பேரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment