சம்மந்தத்தில் இலவச கல்வியை பாதுகாக்கக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உண்ணாவிரதம்
பரங்கிப்பேட்டை அருகே இலவச கல்வியை பாதுகாக்கக் கோரி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வியை பாதுகாக்ககோரியும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:30 ஆக குறைக்க வேண்டும் என்பது உட்பட 32 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு வட்டார தலைவர் காந்தி தலைமை தாங்கினார். வட்டார பொருளாளர் பாலசுப்ரமணியன், மகளிரணி செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தச்சக்காடு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதி வரவேற்றார்.
பட்டினி போராட்டத்தை துவக்கி வைத்தார் மாநில பொதுச்செயலாளர் அப்துல் மஜித். செயலாளர் குப்புசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் பஞ்சநாதன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.
முன்னாள் ஓய்வு பிரிவு செயலாளர் சிவப்பிரகாசம், பாண்டுரங்கன், முன்னாள் வட்டார தலைவர்கள் சுப்ரமணியன், ஏழுமலை, கலியபெருமாள், வாசு தேவன், குஞ்சிதம், நடன குஞ்சிதபாதம், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment