பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது
பரங்கிப்பேட்டை அருகே பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் மனைவியை தாக்கிய கணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பாதம்பிரியாள் (20).
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு கண்ணனும், பாதம்பிரியாளும் தனியாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் பாதம்பிரியாளுக்கு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் மருத்துவமனைக்கு சென்று பாதம்பிரியாளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
நேற்று வீட்டிற்கு சென்ற பாதம்பிரியாளை கண்ணன் மற்றும் அவரது அக்கா கணவர் செல்வ முருகன் ஆகியோர் தகராறு செய்து தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டு ராதா ஆகியோர் வழக்கு பதிந்து கண்ணன் (25), அவரது சகோதரியின் கணவர் செல்வமுருகன் (29) ஆகியோரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment