Sunday, September 30, 2007

பரங்கிப்பேட்டை அருகேயுள்ள மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வர பஸ் வசதி


பரங்கிப்பேட்டை அருகேயுள்ள கிள்ளை மற்றும் கீழ் அனுவம்பட்டு கிராம மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வர பஸ் வசதி

கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நடவடிக்கை




கிள்ளை மற்றும் கீழ் அனுவம்பட்டு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிதம்பரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர பஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மேற்கொண்டார்.

இது குறித்து மாவட்ட வேளாண்மை அதிகாரி கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் புகார்

கிள்ளை, கீழ் அனுவம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதி மாணவர்கள் காலையில் சிதம்பரம் நகருக்கு செல்லவும், மாலையில் சிதம்பரத்தில் இருந்து கிராமங்களுக்கு திரும்பவும் வசதியாக நகர பஸ்கள் விட வேண்டும் என விவசாய சங்கத் தலைவர்கள் கடலூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், மாணவர்களின் பள்ளி, கல்லூரி நேர வசதிக்கேற்ப காலையில் கிள்ளையில் இருந்து சிதம்பரத்துக்கும், மாலையில் சிதம்பரத்தில் இருந்து கிள்ளைக்கும் நகர பஸ் இயக்க மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட பொது மேலாளரை கேட்டுக்கொண்டார்.

பஸ் வசதி

அதன் பேரில் காலையில் கிள்ளையில் இருந்து சிதம்பரத்துக்கும், மாலையில் சிதம்பரத்தில் இருந்து கிள்ளைக்கும் மாணவர் வசதிக்கேற்ப நகர பஸ் இயக்கப்படுகிறது.

விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் புகார்களை கடலூர் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உடனடியாக தெரிவித்து குறைகள் தீர்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: