கிள்ளையில் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு
பரங்கிப்பேட்டை :
கிள்ளையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் கோபால் ஆய்வு செய்தார்.
கடந்த சுனாமியின் போது கடுமையாக பாதித்த கிள்ளை பகுதிகளில் அரசு சார்பில் பல வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் கோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், பேரூராட்சி துணை இயக்குனர் திருவேங்கடம், செயல் அலுவலர் ஜோதிமாணிக்கம், துணை தலைவர் பரமதயாளன், கற்பனைசெல்வம், ரவிச்சந்திரன், சங்கர் உட்பட பலர் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment