Thursday, September 20, 2007

பரங்கிப்பேட்டை அருகே வேலைக்கு சென்றவரை காணவில்லை

இறால் குட்டை வேலைக்கு சென்ற கணவர் மாயம்

மனைவி போலீசில் புகார்

பரங்கிப்பேட்டை அருகே இறால் குட்டைக்கு வேலைக்கு சென்ற கணவரை கடந்த 7 மாதமாக காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (40). இவர் பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள இறால் குட்டையில் வேலை செய்து வந்துள்ளார்.

தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜோதி தனது வீட்டில் இருந்து தீர்த்தாம்பாளையத்தில் உள்ள இறால் குட்டைக்கு வேலைக்கு வந்துள்ளார். ஆனால் இதுவரை ஜோதி வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து ஜோதியின் மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜ் வழக்கு பதிந்து ஜோதியை தேடிவருகிறார்.

No comments: