Thursday, September 20, 2007

தனியார் பஸ்களில் பரங்கிப்பேட்டை வழி என எழுத கலெக்டர் உத்தரவு

கலெக்டர் உத்தரவுப்படி தனியார் பஸ்கள் செல்லும் வழித்தடம் மாற்றி எழுதினர்

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரம் மற்றும் சிதம்பரத்திலிருந்து பரங்கிப்பேட்டை வழியாக கடலூர் வரும் தனியார் பஸ்களில் பரங்கிப்பேட்டை வழி என எழுதப்பட்டது.

இது குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:


கடலூரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரம் செல்லும் தனியார் பஸ்களில் இதுவரை பரங்கிப்பேட்டை வழி என எழுதாமல் இருந்தது.

இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர் என விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் புகார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் தனியார் பஸ்களில் இனி பரங்கிப்பேட்டை வழி என எழுதவேண்டும் என உத்தரவிட்டார்.


இதையடுத்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவுரைப்படி பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் சாயிபாபா, என்.டி. (NT), சி.டி.பி. (CTP), ஸ்ரீபாலாஜி உள்ளிட்ட தனியார் பஸ்கள் வழி பரங்கிப்பேட்டை என தற்போது எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: