Wednesday, September 12, 2007

தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள்

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள்

முழு சுகாதார திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு யுனிசெப் நிறுவனம் சார்பில் 80 சின்டெக்ஸ் நீர் சேகரிப்பு தொட்டி வழங்கப்பட்டுள்ளது.

யுனிசெப் நிறுவனம் முழு சுகாதார திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 80 சின்டெக்ஸ் தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் வழங்கியுள்ளது.

இந்த தொட்டிகள் அனைத்தும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் உத்தரவின்படி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

பண்ருட்டி, அண்ணாகிராமம், காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி, குமராட்சி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர் ஆகிய ஒன்றியங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ஆறு தண்ணீர் தொட்டிகளும்,

கீரப்பாளையம், மங்களூர் ஒன்றியங்களுக்கு தலா ஏழு தண்ணீர் தொட்டிகளும் வழங்கப்பட உள்ளன.

கடலூர் ஒன்றியத்திற்கு நாணமேடு, குண்டுஉப்பலவாடி, தோட்டப்பட்டு, உச்சிமேடு, கொடுக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கும், உண்ணாமலை செட்டிச் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் வழங்கப்பட உள்ளது.

No comments: