Thursday, October 25, 2007

ராணுவத்திற்கு ஆள் தேர்வு

உளுந்தூர்பேட்டையில் ராணுவத்திற்கு ஆள் தேர்வு

கலெக்டர் ராஜேந்திர ரத்னூ அறிக்கை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ராணுவத்திற்கு ஆள் தேர்வு செய்கிறார்கள் என்று கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வருகிற 31-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ராணுவத்திற்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது.

தகுதிகள்

இந்த தேர்வில் சோல்ஜர் டிரேட்ஸ்மென் பதவிக்கு மெட்ரிக் படிப்பிற்கு குறைவாக படித்தவர்கள் 171/2 வயது முதல் 23 வயது வரை, உயரம் 166 செ.மீ, எடை 48 கிலோ. சோல்ஜர் ஜெனரல் 10-ம் வகுப்பு தேர்ச்சி வயது 171/2 வயது முதல் 21 வயது வரை, உயரம் 166 செ.மீ., எடை 50 கிலோ,

மற்றும் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட், சோல்ஜர் கிளார்க்/ஸ்டோர்கீப்பர் பதவிகளுக்கு வயது 171/2 வயது முதல் 23 வயது வரை, மேல்நிலை கல்வி தேர்ச்சி மற்றும் பட்டயகல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி தேர்வு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான தேர்வு சோல்ஜர் டிரேட்ஸ்மென் பதவிக்கு வருகிற 31-ந் தேதி சான்று சரிபார்ப்பும் வருகிற 1-ந் தேதி உடற்தகுதித் தேர்வும்,

சோல்ஜர் ஜெனரல் வருகிற 1-ந் தேதி சான்று சரிபார்ப்பும், வருகிற 7-ந் தேதி உடற்தகுதிதேர்வும்,

சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட் பதவிக்கு வருகிற 3-ந் தேதி சான்று சரிபார்ப்பும், வருகிற 4-ந் தேதி உடற்தகுதி

சோல்ஜர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் பதவிக்கு வருகிற 9-ந் தேதி சான்று சரிபார்ப்பும், வருகிற 5-ந் தேதி உடற்தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.

சான்றிதழ்

மேலும், ராணுவத்தில் சேர கல்விச்சான்று பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பிறப்பிட சான்றிதழ், என்.சி.சி. சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முன்னாள் படைவீரரின்/விதவையரின் பிள்ளைகள் தகப்பனாரின் அசல்படை விலகல் சான்று மற்றும் 12 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

மேலும், விபரங்களுக்கு கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தனது செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார்.

No comments: